அனிருத்தை விட நல்ல பாடல்கள் கொடுப்பான் – தமன் !

2008-ஆம் ஆண்டு வெளியான படம் சிந்தனை செய் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் இசையமைப்பாளர் தமன் . இதன் பிறகு தமன் ஈரம் , காஞ்சனா, ஒஸ்தி ,சேட்டை ,வல்லினம் , வால் போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . தமிழ் படங்களை விட அதிகமாக தெலுங்கு படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . தெலுங்கு திரைப்பட உலகில் இவர் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் .


இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 66வது படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். இயக்குனர் வம்ஷி இந்த படத்தை இயக்குகிறார் . சரத்குமார் , பிரகாஷ்ராஜ் , பிரபு , சங்கீதா என்று பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார் . யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது .இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமன் தளபதி 66 முழுக்கு முழுக்க ஒரு தமிழ் படமாக இருக்கும் . நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் படத்தின் பாடல்கள் பற்றி பேசிய தமன் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வந்த வாத்தி கமிங் மற்றும் அரபிக் குத்து ஆகிய பாடல்களை விட தளபதி 66 பாடல்கள் இருக்கும் . விஜய் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் எனவே அதற்கேற்ப பாடல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் . இசையமைப்பாளர் தமன் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share.