“என்னுடைய அனுமதியின்றி செய்தது தவறு”… விஜய் சேதுபதி படத்துக்கு எதிராக இளையராஜா கொடுத்த புகார்!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அது தான் ‘அன்னக்கிளி’. இந்த படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கியிருந்தனர். ‘அன்னக்கிளி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ‘இசைஞானி’யின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி – இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்துக்கு முதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் இளையராஜா தான்.

அவரும் பின்னணி இசையமைத்து கொடுத்து, படம் சில திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. பின், இளையராஜாவுக்கும் – இயக்குநர் மணிகண்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகையால், படத்திலிருந்து இளையராஜாவின் பின்னணி இசையை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணன் – ரிச்சர்ட் ஹார்வி இருவரையும் கமிட் செய்து இசையமைக்க வைத்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். தற்போது, இது தொடர்பாக இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் இயக்குநர் மீது புகார் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.