‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய ‘இசைஞானி’ இளையராஜா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினியை டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசைஞானி’ இளையராஜா நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.