ரசிகர்களுக்கு ‘இளமை இதோ இதோ’ பாடலை பாடி நியூ இயர் வாழ்த்து சொன்ன இளையராஜா… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அது தான் ‘அன்னக்கிளி’. இந்த படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கியிருந்தனர். ‘அன்னக்கிளி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ‘இசைஞானி’யின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. இந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா.

இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் மிக முக்கிய ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார். தற்போது, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தான் இசையமைத்த ‘சகலகலா வல்லவன்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘இளமை இதோ இதோ’ பாடலை பாடி ரசிகர்களுக்கு நியூ இயர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Share.