புதிய ஸ்டுடியோ தொடங்கிய ‘இசைஞானி’ … வெற்றிமாறன் – சூரி படத்தின் மியூசிக்கல் அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். 2007-ஆம் ஆண்டு ‘பொல்லாதவன்’ படத்தில் துவங்கிய இவரின் வெற்றிப் பயணம், ‘ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்’ வரை தொடர்ந்திருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கிய ஐந்து படங்களில், பிரபல நடிகர் தனுஷ் தான் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம், சூர்யாவின் ‘வாடிவாசல்’, தனுஷ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூரி படத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், பவானிஸ்ரீயும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். தற்போது, இந்த படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை இன்று (பிப்ரவரி 3-ஆம் தேதி) இளையராஜா தான் தொடங்கியிருக்கும் புதிய ஸ்டுடியோவில் ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ துவக்க விழாவில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.