படமாகும் இளையராஜாவின் இசைப்பயணம் !

இந்திய சினிமாவின் தலைச்சிறந்த இசையமைப்பாளராய் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. அண்ணக்கிளி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். இவர் ஆயிரம் படத்திற்கு மேல் இசையமைத்து சாதனை செய்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் நேற்று (ஜூன் 2 ) கொண்டாடினார். மேலும் கோவையில் ராஜா என்னும் இசை நிகழ்ச்சியும் நடத்தினார்.

இந்த நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, ‛ராஜா – தி மியூசிகல்’ என்ற பெயரில் தனது இசைப்பயணம் குறித்த திரைப்படம் தயாராவது குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தை 2024ல் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க போகிறார்கள் , எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க இருக்கிறார்கள் போன்ற அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிகிறது.

நடிகர் தனுஷ் இந்த படத்தில் இளையராஜாவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Share.