‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரும், விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவின் வீட்டில் ஐடி ரெய்டு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்த படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 22-ஆம் தேதி) காலையிலிருந்து சென்னை அடையாரில் உள்ள தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் வீட்டிலும், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சேவியர் பிரிட்டோ தரப்பில் விசாரிக்கையில் “ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் இதுபோன்ற சோதனை நடக்கும்” என்று தெரிவித்தனர்.

Share.