மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

‘திரௌபதி’ , ருத்ரதாண்டவம் , போன்ற படங்களை இயங்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க போவதாக அறிவிப்பு வந்தது. ஏற்கனவே செல்வராகவன் ஞானி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இதில் பீஸ்ட படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. சானி காகிதம் விரைவில் ஒ.டி.டியில் வெளியாக இருக்கிறது.

மேலும் செல்வராகவன் தான் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடிக்கிறார்‌.

இந்நிலையில் செல்வராகவன் – மோகன் ஜி கூட்டணியில் உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமிபத்தில் இந்த படத்திலிருந்து புது அப்டேட் வெளியாகி இருக்கிறது.

சதுரங்க வேட்டை , கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் செல்வராகவனுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார் நட்டி நட்ராஜ்.

Share.