அடேங்கப்பா… ‘இரண்டாம் குத்து’-வின் டீசருக்கு யூடியூபில் இத்தனை லட்சம் வியூஸா?

தமிழில் இப்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் ஆர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். தற்போது, யூடியூபில் இந்த டீசர் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை சந்தோஷ்.பி.ஜெயக்குமாரே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Share.