தெலுங்கு ஆடியன்ஸுக்கு குட் நியூஸ் சொன்ன ‘இரண்டாம் குத்து’ டீம்!

தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருந்தது. இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’-வின் பார்ட் 2-வான ‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருந்தது.

சென்சார் குழுவினரிடம் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இந்த படம் சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இந்த படத்தின் சென்சார் செய்யப்படாத வெர்ஷனை பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்தனர். தற்போது, இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சித்தாகொட்டுடு 2’வை வருகிற ஜனவரி 7-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.