‘பிக் பாஸ் 5’-ஆ? ‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ஆ?… ‘கனா காணும் காலங்கள்’ இர்ஃபானின் பதில் என்ன தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் ஃபேமஸான நடிகர் இர்ஃபான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “நீங்க ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா? அல்லது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு இர்ஃபான் “பிக் பாஸ்ல கண்டிப்பா கலந்துக்க மாட்டேன். ‘குக் வித் கோமாளி’ சீசன் 2-வுக்கே என்ன கூப்பிட்டாங்க. நான் தான் அப்போ போகல.. இப்போ சீசன் 3-க்கு என்ன கூப்பிட்டாங்கன்னா, நான் கண்டிப்பா கலந்துக்குவேன்” என்று கூறியுள்ளார்.

Share.