இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகைக்கு ‘கொரோனா’ பாதிப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வைபவி சாண்டில்யா. இவருக்கு தமிழ் திரையுலகில் அமைந்த முதல் படமே காமெடி நடிகர் சந்தானத்துடன். அந்த படம் தான் ‘சக்க போடு போடு ராஜா’. இந்த படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் நடித்தார் வைபவி சாண்டில்யா.

இந்த படத்தில் வைபவி சாண்டில்யாவின் நடிப்பு அதிக கவனம் ஈர்த்தது. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை வைபவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கேப்மாரி, சர்வர் சுந்தரம்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘கேப்மாரி’ ரிலீஸாகி விட்டது. ‘சர்வர் சுந்தரம்’ பல வருடங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

வைபவி சாண்டில்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மராத்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் தமிழில் இரண்டு படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், வைபவி இன்ஸ்டாகிராமில் “எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை வைபவியின் ரசிகர்கள் ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.