3டி வடிவில் நடிகர் கமலின் படம் !

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான்.
இந்த படத்திற்கு நடிகர் கமல் திரைக்கதை எழுதி இருந்தார் . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ரவீனா மற்றும் மனிஷா கொய்ராலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் . கமல் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்

தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற , 2டி அனிமேஷன் காட்சிகள்,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தை முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலகட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் 3டி முறையில் புதிய வடிவில் ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு விரைவில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். இதனால் நடிகர் கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share.