ஆயிரத்தில் ஒருவன் 2 கைவிடப்பட்டதா ?

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர் . இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் மாறன். இந்த படம் ஓ.டி.டியில் வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார் .

குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற கதையில் நடித்து வருகிறார் தனுஷ் .இந்த படத்தை கலைப்புலி எஸ் .தாணு அவர்கள் தயாரிக்கிறார் . செல்வராகவன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படப்பிடிப்பில் இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் . ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் மற்றும் படப்பிடிப்பு காலத்தின் அளவும் அதிகமாகும் போன்ற காரணங்களால் இந்த படத்தை தற்போது செல்வராகவன் எடுக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இதற்கு பதிலாக செல்வராகவன் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் . புதுப்பேட்டை படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இல்லை எனவே இந்த படத்தை எடுக்க நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் முடிவு செய்துள்ளனர் .

Share.