தாராள பிரபுவுக்கு கல்யாணம் !

இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியான படம் சிந்து சமவெளி.இந்த படத்தில் நாயகனாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதன் பிறகு அரிது அரிது , சட்டப்படி குற்றம் ,சந்தமாமா போன்ற படங்களில் நடித்து இருந்தார் . பின்னர் ஜெய் ஸ்ரீ ராம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.இதன் பின் இவர் நடித்த பொறியாளன் படம் ஓரளவிற்கு வரவேற்பை கொடுத்தது .அதன் பின் வில் அம்பு மற்றும் காதலி படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார் . இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் . குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகமாக கிடைத்தனர் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரது திரை பயணம் ஏற்றம் கண்டது . பியார் பிரேமா காதல் படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது . இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் .

இதன் பின் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன குறிப்பாக தாராள பிரபு படம் நல்ல வெற்றியை பெற்றது .ஹரிஷ் கல்யாண் தற்போது நூறு கோடி வானவில் படத்தில் நடித்து வருகிறார் .இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது . ஆகஸ்ட் மாத கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

Share.