விக்ரம் மூன்றில் நடிகர் விஜய் நடிக்கிறாரா ?

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . ரசிகர்கள் அனைவரும் ஜூன் -3ஆம் படத்தை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் . இந்நிலையில் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்த நடிகர் கமல் டெல்லி , கொச்சி போன்ற பல ஊர்களுக்கு சென்றுள்ளார் . அந்த வகையில் மலேசியா சென்ற கமல் அங்குள்ள பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளார் . அதில் விக்ரம் படத்தின் மூன்றாவது பாகத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது .

இதற்கு பதில் அளித்த நடிகர் கமல் விக்ரம் பாகம் மூன்றில் ஏற்கனவே சூர்யா நடிக்க இருப்பது உங்களுக்கு தெரியும் எனவே தளபதி விஜய் ஐயா கால் சீட் கொடுத்தால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாராக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார் .

Share.