ஒரே மேடையில் ரஜினி , விஜய் , சூர்யா !

நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படக்குழு படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் உள்ளனர் . பேன் இந்திய படமாக இந்த படம் உள்ளதால் படத்தினை வெளியாகும் அனைத்து மொழிகளிலும் விளம்பர படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .இந்நிலையில் பத்தல பத்தல என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . வருகின்ற 15-ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது . இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த கமல் முடிவு செய்துள்ளார் .

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏற்கனவே ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் தற்பொழுது இந்த விழாவில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரும் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

இதனால் நடிகர்கள் ரஜினி , கமல் , விஜய் , சூர்யா , விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒரே மேடையில் ஏற இருக்கிறார்கள் . இதனை காண தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது .

Share.