பிரபல நடிகை ஈஷா ரெப்பாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ தான். இதில் ஈஷா ரெப்பாவுக்கு கெஸ்ட் ரோல் தான்.

அதன் பிறகு ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ஈஷா ரெப்பா. ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ படத்துக்கு பிறகு நடிகை ஈஷா ரெப்பாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பன்டிபோட்டு, அமி துமி, தர்ஷகுடு, ஆவ், பிராண்ட் பாபு, அரவிந்த சமீதா வீர ராகவா, சுப்ரமண்யபுரம், சவ்யசாச்சி, பிட்ட கதலு, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ என தெலுங்கில் படங்கள் குவிந்தது. ஈஷா ரெப்பா தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘ஓய்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது ஈஷா ரெப்பா கைவசம் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், ஈஷா ரெப்பா பிரபல தமிழ் இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் மாப்பிள்ளை யாரென ஈஷா ரெப்பாவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.