மாவீரன் படத்தின் ” மொக்க ஜோக் அதிதியின் ” கதாபாத்திரம் இது தானா ?

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன் . இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் . யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது .

இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது .விருமன் படத்தின் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கும் நடிகை அதிதி ஷங்கருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . முதல் படம் வெளியாவதற்குள் இரண்டாவது பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் நடிக்க இருக்கிறார் அதிதி . இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகி இருந்தது .இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு அதிதி 25 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் அதிதி ஷங்கரின் கதாபாத்திரம் பற்றின தகவல் வெளியாகி உள்ளது .அதிதி ஷங்கர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.