தீபாவளியை குறி வைக்கிறாரா அஜித் ?

நடிகர் அஜித் தமிழ் திரை உலகில் முன்னை நடிகராக இருந்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை படம் வெளியானது .எச். வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை . இருந்தாலும் படத்தில் இருந்த சண்டை காட்சிகள் அனைவராலும் பாராட்டப் பெற்றது .

இந்த நிலையில் மீண்டும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் .இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார் . இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியானது . அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அஜித்தும் கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையில் இருந்ததாக தகவல் வெளியானது . அஜித் கேரளாவில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது .

தற்பொழுது இந்த படத்தை பற்றிய மேலும் சில தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது என்றும் ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதவகவும் தகவல் வெளியாகி இருக்கிறது ,ஆகஸ்ட் இறுதிக்குள் மொத்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று படக்குழு.

திட்டம் தீட்டி உள்ளது . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் . ஏற்கனவே இரண்டு பாடல்களை ஜிப்ரான் முடித்து விட்டார் என்று சோனி மியூசிக் நிறுவனம் ஆடியோ உரிமத்தை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது . நடிகர் கவின் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் வருகின்ற தீபாவளிக்கு படத்தினை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

Share.