அடுத்து அடுத்து வெளியாகுமா அஜித் படத்தின் அப்டேட் ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் வருகின்ற மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் . நடிகர் அஜித்தின் பிறந்த நாள் அன்று இரண்டு அஜித் படத்தின் அப்டேட் வருகிறது என்று செய்தி வெளியாகி இருக்கிறது .அதில் ஒன்று நடிகர் அஜித் மற்றும் ஹச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் அஜித் 61-வது படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாக வாய்ப்பு உள்ளது . இரண்டாவது படம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் இந்த படத்தின் அதிகார்வபூர்வ அறிவிப்பு மே 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது .

எனவே நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் அனைவரும் இந்த இரண்டு அப்டேட்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

Share.