வெற்றிமாறன் கதையில் நடிக்க மறுத்த ஆண்ட்ரியா !

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார் .இதனை தொடர்ந்து
ஆயிரத்தில் ஒருவன்,மங்காத்தா, விஸ்வரூபம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2005-ஆம் ஆண்டு அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலை பாடி இருந்தார். இதனை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி , போன்ற படங்களிலும் பாடி இருந்தார் . மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் கதாநாயகனாக நடித்த டாப்ஸிக்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் .அதன் பிறகு வெற்றிமாறன் படத்தில் வடசென்னை நடித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெற்றிமாறனை பற்றி பேசியுள்ளார். அதில் இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்துக்கு முன்னாள் தன்னை சந்தித்து வேறு ஒரு கதை சொல்லியிருந்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க என்னை அனுகினார். ஆனால் அந்த காலத்தில் எனக்கு நடிக்க ஆசை இல்லை எனவே அந்த படம் நடிக்கவில்லை .அதன் பிறகு டாப்ஸிக்கு பின்னணி குரல் கொடுத்தேன் பிறகு வடசென்னை படத்தில் நடித்தேன் படப்பிடிப்பின் பொழுது வெற்றி வேற மாதிரி இருந்தார்.தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் என்று தெரிவித்துள்ளார்.

Share.