மீண்டும் ரஜினியுடன் மோத போகிறாரா அரவிந்த் ஸ்வாமி ?

ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் .படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில முக்கிய நட்சத்திர நடிகர்களுக்கு ‘ஜெயிலர்’ படத்திற்காக டெஸ்ட் லுக் சமீபத்தில் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . மேலும் அந்த இடத்தில் பிரமாண்ட செட் ஒன்று ஹைதராபாதில் கட்டப்பட்டு உள்ளது . மேலும் இந்த படம் இயக்குனருக்கு அவரது முந்தைய படங்களை ஒப்பிடும் போது வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மறுபுறம், ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் முழுப் பொறுப்பையும் நெல்சன் திலீப்குமாரிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் சில கதாபாத்திரங்களுக்கு அவர் விரும்பும் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்க இயக்குநருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் மிக முக்கிய பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தரமணி , ராக்கி உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த வசந்த் ரவி, நடிகர் ஜெய் நடிக்க உள்ளிட்ட நாயகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள்

இந்நிலையில் சமீபத்தில் டான் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர்
சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் தற்போது அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த் ஸ்வாமி நடிக்க இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது . அரவிந்த் சாமி அவர்களிடம் கதையை சிபி கூறி உள்ளார் விரைவில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஓகே சொல்லிவிடுவார் என்று கூறப்படுகிறது .

Share.