அருண் ராஜா இயக்கத்தில் நடிக்கிறாரா கார்த்தி ?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . இந்த படம் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி சார்த்தர் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் .கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் . ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி . இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 24-வது படத்தின் செய்தி வெளியாகி இருந்தது .

குக்கூ , ஜோக்கர் , ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் கார்த்தியின் 24 வது படத்தை இயக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் கார்த்தி , இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தின் படப்பிடிப்பு 40% தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருப்பதாகவும் கார்த்திக்கு வில்லனாக நடிக்க தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகனை நடிக்க வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது !

Share.