முத்தையா படத்தில் விஜய் சேதுபதியா ?

நடிகர் கமல்ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள விக்ரம் படத்தையும் அவரே தயாரித்துள்ளார்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம்‌ 3ஆம் தேதி வெளியாகிறது.


இதனை‌ தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் ஒன்றை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை வைத்து முத்தையா இயக்கத்தில் படம் ஒன்றினை‌ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன் பின் ஆர்யாவிற்கும் ராஜ்கமல் நிறுவனத்துக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி இருந்தது . இந்த காரணத்தினால் நடிகர் ஆர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் முத்தையா இயக்க இருக்கும் அந்த படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்று கமல் முயற்சி செய்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது . இந்த படத்தின் யார் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் விக்ரம் படம் திரைக்கு வந்த பின் தெரியவரும் என்று கூறப்படுகிறது .

Share.