மீண்டும் விஜய் படத்தை இயக்க உள்ளாரா அட்லீ ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்து உள்ளது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாகி வருகிறது . இந்த படத்தின் கதை வலுவாக இருக்கிறது என்று சமீபத்தில் நடிகர் சரத்குமார் தெரிவித்து இருந்தார் . மேலும் இந்த படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு பெங்களூரில் நடக்க இருக்கிறது இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . அதை ஒரு விருது விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார் .

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் ராயப்பன் என்கிற கதாபாத்திரம் இருந்தது. இதை பற்றி அமேசான் சமூகவலைத்தளத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் ஒரு முழு படம் வந்தால் எப்படி இருக்கும் என்று பதிவிட்டுள்ளனர் . இதை பார்த்த இயக்குனர் அட்லீ செஞ்சிட்டா போச்சு என்று பதிவிட்டுள்ளார் . இதனால் தளபதி 68 படத்தை அட்லீ இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது .

 

Share.