அவ்வை ஷண்முகி இந்த படத்தின் இன்ஸ்பிரேஷனா ?

அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும் .கே. எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார் இந்த படத்தை . கிரேஸி மோகன் இணைந்து வசனம் எழுந்து இருந்தார் . இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா முதன்மை பாத்திரத்தில் நடித்த இருந்தனர். ஜெமினி கணேசன், நாகேஷ், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் மற்றும் ஆன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் .

அவ்வை சண்முகி 10 நவம்பர் 1996 இல் வெளியிடப்பட்டது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது: சிறந்த ஒப்பனை கலைஞர் (கே. எம். சரத்குமார்) மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் . ஒரு வருடம் கழித்து, இந்தப் படம் ஹிந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது, கமல்ஹாசன் இயக்கி அவரது பாத்திரத்தை மீண்டும் செய்தார்.


மிஸஸ் டவுட்ஃபயர் (1993) என்ற அமெரிக்கத் திரைப்படத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவ்வை ஷண்முகி படம் எடுக்கப்பட்டது . விவாகரத்து செய்த கதாபாத்திரம் , அவர் தனது முன்னாள் மனைவியிடம் காவலில் இருக்கும் தனது மகளுக்கு நெருக்கமாக இருக்க ஆயா போல் மாறு வேடமிட்டு நடித்திருப்பார் கமல் .

Share.