நடிகர் விஜய்க்கு சாபம் விட்ட முஸ்லிம் அமைப்பு

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் இயக்கத்தில் பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் பேசி வருகிறார்கள் .

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் பீஸ்ட் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போரா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார் .துப்பாக்கி படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றும் படத்தின் வில்லன் உமர் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விவரம் எல்லாம் படத்தில் இல்லை என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்த இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைப்பட்டு இருக்கிறது என்று விமர்சித்தார் .பீஸ்ட் திரைப்படத்தை உடனே தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் உயர் நீதிமன்றம் மூலம் படத்திற்கு தடை விதிக்க தங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .ரமலான் நோன்பு இருப்பதால் நடிகர் விஜய் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடியாத சூழல் உள்ளதால் ஒவ்வொரு நோன்பு திறக்கும் பொழுது நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவனின் சாபம் கிடைக்க துவா செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார் .

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது .

Share.