ஹீரோவாகும் நடிகர் முனிஷ்காந்த் !

காதல் கிறுக்கன் , ஆழ்வார் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தவர் முனிஷ்காந்த் .அதன் பிறகு வெப்பம் , எத்தன் , கடல் போன்ற படங்களில் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் முனிஷ்காந்த . அதன் பிறகு கடல் , முண்டாசுப்பட்டி , நேரம் , பசங்க 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு பல படங்களில் இவர் நடித்து உள்ளார் . இந்நிலையில் இவர் நாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து நடிக்கும் மிடில் கிளாஸ் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனிஷ்காந்த் மற்றும் ‘சென்னை 600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மிடில் கிளாஸ்’.

இந்த படத்தில் ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன், குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். சன்லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. வருகிற ஜூன் 27-ம் தேதி படப்பிடிப்பை தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.