தமிழ் சினிமாவின் புதிய கேப்டன் யார் தெரியுமா ?

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ்
இவர் தற்பொழுது செல்வராகவன் இயக்குகிற நானே வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைப்புலி.எஸ்.தானு இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் நடிகர் தனுஷ் ஒரே சமயத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி என்கிற படத்திலும் நடித்து
வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் தனுஷ்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். சமிபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கி உள்ள திரைப்படம் சாணி காகிதம் .செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் விரைவில் ஒ.டி.டியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் மற்றும அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.1930களில் நடக்கும் கதையாக இதை படமாக்க உள்ளனர். இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது.மேலும் இந்த படம் நான் இந்தியா படமாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Share.