இயக்குனர் நெல்சனின் அடுத்த டார்கெட் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தனது டார்க் காமெடி படங்கள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார் . இவர் இயக்கத்தில் முதலில் வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . சரண்யா பொன்வண்ணன் , யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது .

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார் நெல்சன் திலீப்குமார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து இருந்தார் . அனிருத் இசையில் இந்த படம் உருவாகி இருந்தது . இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியானது . இந்த படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது . மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது . இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குகிறார் . இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது .

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்து தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலைவர் 169 படம் முடிந்த பின்னர் இந்த படம் பற்றின அறிவிப்பு வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

Share.