தமிழ் சினிமாவில் நுழையும் “தல தோனி ” !

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரும் , இந்திய சினிமாவின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கிரிக்கெட் துறையில் பல சாதனை செய்துள்ளார் .நடிகர் தோனி கிரிக்கெட்டை தவிர சினிமா மீது ஆர்வம் உடையவராக திகழ்கிறார் . இந்நிலையில் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார் . அதற்காக தனி தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் . இந்த நிலையில் எம்.எஸ்.தோனி தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் . நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைத்துள்ளார் .

அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி தமிழகத்தில் ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது . அதில் முதல் கட்டமாக நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை அவர் தயாரிக்கிறார் .அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது எனக் கூறப்படுகிறது . எம்.எஸ்.தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாக வந்துள்ள செய்தி தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது .

நயன்தாரா அட்லீ இயக்கும் படம் ஒன்றில் நடித்து இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share.