காமெடி படத்தில் ஜி.வி.பிரகாஷ் !

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .

தற்போது தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் இவர் பிடித்துள்ளார்‌.
சமிபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஐங்கரன் , செல்ஃபி, உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

ஜி.வி.பிரகாஷ் அடுத்து இயக்குனர் பூபதி பாண்டியனுடன் இணைந்து ஒரு காமெடி படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . பூபதி பாண்டியன் நிறைய காமெடி படங்களை இயக்கி இருக்கிறார் . வின்னர் படத்திற்கு வசனமும் எழுதி இருக்கிறார் . தேவதையை கண்டேன் , மலைக்கோட்டை, திருவிளையாடல் ஆரமபம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் .

இந்நிலையில் இவர்கள் இணையும் படத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . இதனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .

Share.