சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கு உள்ளது . விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .மேலும் மும்பைக்கு சென்று அவரிடம் கதை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது .

அஜித்- விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் ” Ak 63′ படத்தை பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது . மேலும் அந்த படத்திற்கு வரம் என்று தலைப்பு வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.