டான் படத்தின் கதை இதுதானா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அவரது 20-வது படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவித்தார் . இந்த படத்திற்கு டான் என்று தலைப்பு வைத்துள்ளார்கள் . இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து இருக்கிறார் . விஜய் டிவி நட்சத்திரமான ஷிவாங்கி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் படத்தின் கதையை பற்றி பேசி இருக்கிறார் .டான் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. கதாநாயகன் பிறந்தது முதல் அவனது முப்பது வயது வரை அவன் வாழ்வில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் கதை என்று தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் என்ற தகவலையும் படத்தின் இயக்குனர் பகிர்ந்து உள்ளார்.

Share.