ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்க போகிறாரா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . விக்ரம் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது .வசூல் ரீதியாகவும் இந்த படம் இமாலய வெற்றி பெற்றுள்ளது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது . இதனை கருத்தில் கொண்டு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறது லைக்கா நிறுவனம் என்ற செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது .

இந்தியன் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் இயக்குனர் ஹச்.வினோத் நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு அரசியல் கதை கூறி உள்ளார் . இந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதாகவும் , விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .இயக்குனர் ஹச்.வினோத் தற்போது நடிகர் அஜித்தை வைத்து அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார் . மேலும் நடிகர் விஜய் சேதுபதி படம் ஒன்றையும் வினோத் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது .

Share.