காத்து வாக்குல ரெண்டு படத்தை ஹிந்திக்கு பல கோடி விற்ற படக்குழு !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் . லலித் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இசையமைப்பாளர் அனிருத் இது 25வது படமாக அமைந்துள்ளது .

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது . மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் முழுவதமாக நிறைவடைந்தது . கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது .படம் வெளியான பிறகு இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . பெரும்பாலான ரசிகர்கள் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்தை கொண்டாடி தீர்த்தனர். பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் இந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பரவலாக ரசிகர்கள் இந்த படத்தை ரசித்தார்கள் .இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் சுமார்
3.30 கோடிக்கு விலைபோகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.