அறியாமையில் பேசிய அஜய் தேவ்கன் !

ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது பலபேருக்கு தெரிவது இல்லை குறிப்பாக பாலிவுட் நடிகர்களுக்கு. ஹிந்தி தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னும் போட்ட டிவீட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்திய சினிமாவில் சமீபகாலமாக உருவாகும் படங்கள் தமிழ், தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி கொண்டு இருக்கிறது . ஒரு மொழியில் படத்தை எடுத்து விட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்வதால் நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள் .

இந்நிலையில் ” நான் ஈ ” படத்தில் வில்லனாக நடித்து தமிழில் பிரபலமாகிய நடிகர் கிச்சா சுதீப் . இவர் தற்பொழுது ” விக்ராந்த் ரோணா ” என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை கன்னடம் மட்டுமில்லாமல் ஹிந்தி , தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள் படக்குழுவினர் .

இந்த படத்தின் விளம்பர படுத்த நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுதீப் ” ஹிந்தி தேசிய மொழி கிடையாது . பாலிவுட் நட்சத்திரங்களும் பேன் இந்திய பொங்கல் எடுக்கிறார்கள் . ஆனால் பெரிதாக வெற்றி பெறுவதில்லை என்று தெரிவித்துள்ளார் . இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில் அளித்துள்ளார் அதில் ” ஹிந்தி நமது தேசிய மொழி மற்றும் தாய் மொழியாக இல்லாவிட்டால் நீங்கள் ஏன் உங்களது படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள் சகோதரர் கிச்சா சுதீப் அவர்களே என்று கேட்டுள்ளார். மேலும் ஹிந்தி எப்பொழுதும் நமது தாய் மொழி மற்றும் தேசிய மொழியாக இருக்கும் என்று தெரிவித்தார் .

இதற்கு பதிலளித்த சுதீப், “நான் பேசியது, பொருள் வேறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். நான் நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். புண்படுத்துவது போலவோ, தூண்டும்படியோ, விவாதத்துக்கோ நான் அதைச் சொல்லவில்லை. நான் ஏன் அப்படிச் செய்ய போகிறேன் சார்” எனப் பதிலளித்திருந்தார். மேலும் “நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனென்றால் நாங்கள் மதித்து, நேசித்து ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படும் என்று. நாங்களும் இந்தியாவில் தானே இருக்கிறோம் சார்? என்றார் சுதீப் .

இந்தப் பதிலுக்குப் பிறகு அஜய் தேவ்கன், “நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும் நமது துறை ஒன்று என்றே கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பகிர்ந்திருந்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை திவ்யா . இவர் வாரணம் ஆயிரம் , குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார் . அவர் கூறியதாவது ” ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல மேலும் உங்கள் அறியாமை திகைப்பாக இருக்கிறது . KGF ,RRR , புஷ்பா போன்ற படங்கள் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன . கலைக்கு மொழி தடை இல்லை என்றும் உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பது மாதிரி எங்களது படங்களை நீங்கள் ரசியங்கள் என்று தெரிவித்துள்ளார் .

Share.