கமல் – முத்தையா கூட்டணி உண்மையா?

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் .
இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மேலும் நரைன் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது . மேலும் இந்த படத்தை ஜூன் 03ம் தேதி வெளியிட போவதாக படக்குழு அறிவித்து உள்ளதுஉள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க போவதாக தகவல் வெளியானது . கமல் கிராமத்து கதையில் நடித்து பல வருடங்கள் ஆகிறது எனவே கமல் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின . ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

நடிகர் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார் . அதில் ராஜா பார்வை , சதி லீலாவதி , தேவர் மகன் , போன்று பல படங்களை தயாரித்துள்ளார் .அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தினை தயாரிக்கிறார் கமல்.

அந்த வரிசையில் முத்தையா இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் . அந்த படத்தையும் கமலஹாசன் தான் தயாரிக்க இருக்கிறார் . எனவே கமல் முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை . இயக்குனர் முத்தையா தற்போது விருமான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார் . விருமன் படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.