மீண்டும் ஆரம்பமாகும் கமல் படங்கள் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது . மேலும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து உள்ளது . சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பற்றி பேசியுள்ளார் . லைக்கா நிறுவனத்திடம் இந்தியன் 2 பற்றி பேசியதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்
தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

தற்பொழுது நடிகர் கமல் இயக்க இருந்த சபாஷ் நாயுடு என்கிற படத்தை நடிகர் கமல் திரும்ப எடுக்க உள்ளதாக தகவல் வெளியகி இருக்கிறது. 2016ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இயக்குனர் ராஜீவ்குமார் படத்திலிருந்து விலகிய பிறகு படத்தின் எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் விலகினார். அவரது மனைவிக்கு விபத்து ஏற்பட்டதே அவர் விலகக் காரணம். அமெரிக்காவில் ஒரு மாத படப்பிடிப்பு நடந்த பின் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணா கும்மாடியை மாற்றினார் கமல். அதற்கடுத்து சென்னை திரும்பிய பின் கமல்ஹாசன் வீட்டில் விழுந்து அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி பல காரணங்களால் தடைப்பட்ட இந்த படத்தை விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் திரும்ப எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.