நடிகர் கார்த்தியை இயக்குகிறாரா அருண்ராஜா காமராஜ் ?

நடிகர் கார்த்தி தனது வித்தியாசமான கதை தேர்வால் தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருந்தார் . இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்தார் பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து முடித்தார் . இந்த இரண்டு படங்களது இறுதிக்கட்ட வேலை நடந்து வருகிறது .

இதனை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் . அதனை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

Share.