பிரபல நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் . பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் . அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபுவுடன் சர்க்காரி வாரு பாட்டா என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . சமீபத்தில் தமிழில் இவர் நடித்த சாணிக்காயிதம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஷங்கர் இயக்கி வரும் ராமச்சரன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

ராமச்சரன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் கதையை எழுதியவர் கார்த்திக் சுப்புராஜ் . இந்த படம் தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது . குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆக்‌ஷன் பொலிடிக்கல் திரில்லர் படமாக உருவாகி வருகிறது . இந்த படத்தில்
ராம் சரண் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . இதனால் இந்த படத்தில் கியாரா அத்வானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2.o . இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.ஷங்கர் தெலுங்கு நடிகரை வைத்து முதல் முறையாக இயக்குகிறார் . இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

Share.