சூப்பர் ஹீரோ படத்தில் லெஜெண்ட் சரவணன் !

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார் . அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் .

 


இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி உள்ளார் . ஷங்கர் படத்திற்கு இணையாக பிரமாண்டமாய் இந்த படம் காணப்படுகிறது . மேலும் இந்த படத்திற்கு நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமன்னா , ஹன்சிகா என பல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள் .

இந்நிலையில் லெஜெண்ட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . லெஜெண்ட் சரவணன் அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது . லெஜெண்ட் சரவணன் அடுத்து சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது . விரைவில் இதை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Share.