மீண்டும் இணைகிறதா அஞ்சான் கூட்டணி ?

ஆனந்தம் , ரன் , சண்டைக்கோழி போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிவர் தான் இயக்குனர் லிங்குசாமி. பையா படத்திற்கு பிறகு இவர் இயக்கிய வேட்டை , அஞ்சான் , சண்டைக்கோழி 02 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சண்டக்கோழி 2 .

இந்த நிலையில் தற்பொழுது இவர் “தி வாரியர் ” என்ற படத்தை தெலுங்கில் இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து இருக்கிறார் . இந்த படத்தினை ஸ்ரீநிவாஸ் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது .

“தி வாரியர் ” படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஜூலை 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்து இயக்குனர் லிங்குசாமி ஒரு கதை சொல்லி இருக்கிறார் . கதையின் சுருக்கத்தை கேட்ட சூர்யா முழுமையாக கதையை தயார் செய்து கொண்டவர சொல்லி இருக்கிறார் என்றும் சூர்யாவின் லைன் அப்பில் லிங்குசாமி இணைவது உறுதி என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.