லோகேஷின் அடுத்த டார்கட் ரஜினியா ?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி நிலவி வந்தது. வெங்கட் பிரபு, தேசிங்கு பெரியசாமி , போன்ற இயக்குனர்களின் பெயர்கள் தலைவர் 169 படத்தை எடுக்கப்போவதாக இணையத்தில் வைரலானது. வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார் என்ற தகவலும் வெளியாகின.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் , இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்கப்போவதை உறுதி செய்தது.


.
இந்நிலையில் சமிபத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் பொழுது ரஜினியை ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது‌. ஏற்கனவே கொரோனா காலத்திற்கு முன்பு ரஜினியை வைத்து லோகேஷ் இயகக போவதாக தகவல் வெளியானது. சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இந்த பேச்சு வார்த்தையின் மூலம் ரஜினி ராஜ்கமல் நிறுவனத்துக்கு படம் நடிக்க ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனவே இது தலைவர் 170 படமாகவும் இருக்கலாம்.

Share.