பழைய விக்ரம் படத்திற்கும் புதிய விக்ரம் படத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ?

நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் விக்ரம் என்ற தலைப்பில் 36 வருடங்களுக்கு முன்பு கமல் ஒரு படம் நடித்து இருந்தார் . அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை லிசி.

நடிகை லிசி தற்போது சென்னையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான மிகப்பெரிய ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். விக்ரம் படத்தின் ஒலிக்கலவை சேர்ப்பு பணிகள் இங்கே தான் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் நடிகை லிசி விக்ரம் படத்தை பற்றி பேசி உள்ளார் . அதில் நான் 17 வயதாக இருக்கும்போது விக்ரம் படத்தில் நடித்து இருந்தேன் . மிகப்பெரிய ஹீரோவான கமல்ஹாசன் மற்றும் கிரேக்க ராணி போன்ற பாலிவுட் கதாநாயகி டிம்பிள் கபாடியா ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அது மிகப்பெரிய கனவு போலவும் அற்புதமாகவும் இருந்தது.

இப்போது அதே டைட்டிலில் மீண்டும் கமல் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தரவில்லை என்பதில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் என்னுடைய ஸ்டுடியோவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றது என்பதால் நானும் இந்த படத்தில் பங்கு கொண்டது போன்ற மகிழ்ச்சியும் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .

மேலும் ஏற்கனவே வெளியான விக்ரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படம் அருமையாக வந்திருக்கிறது என்று பேசி உள்ளார் .

Share.