தள்ளிப்போன விஜய் சேதுபதி படம் !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன்.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் .இந்த படத்தை தயாரிப்பாளர் R.K .சுரேஷ் வெளியிடுகிறார் .இந்த படத்தில் நடிகை காயத்திரி மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் .

இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர் . இந்த படத்தை பிரத்தியேக காட்சி மூலம் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்து இருந்தார் .

இந்த படம் வருகின்ற மே 20ஆம் தேதி வெளியாக இருந்தது இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து அடுத்து நிறைய படங்கள் வெளியாகி கொண்டு இருப்பதால் மாமனிதன் படத்தை மே மாதம் 20-ஆம் வெளியிடவில்லை என்றும் ஜூன் 24-ஆம் தேதி அன்று தான் வெளியாகும் என படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் R.K.சுரேஷ் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த படம் தமிழ்நாடு முழுக்க நானூறுக்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகும் என கூறியிருக்கிறார்.

Share.