சினிமாவை விட்டு வெளியேறும் உதயநிதி !

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் .

இந்நிலையில் மாமன்னன் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது . விரைவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படமான கோப்ரா படத்தை உதயநிதி தமிழ்நாட்டில் விநியோகம் செய்கிறார். கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி மாமன்னன் தான் தனது கடைசி படம் அதன் பின் அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது .

Share.