நடிகர் மம்மூட்டிக்காக காத்திருக்கும் கமல் !

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா .ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்தார். நடிகர் கமல் நடித்த விருமாண்டி படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் . மேலும் நீண்ட நாட்களாக மதுரை களத்தில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது என்று கூறினார் .

இயக்குனர் ரஞ்சித் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் . இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமலை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலையாள திரைப்பட உலகின் இயக்குனர் மகேஷ் நாராயணன்‌ நடிகர் கமலை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது ‌. அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதி உள்ளார் . சில வருடங்களுக்கு முன்பு தேவர் மகன் இரண்டாம் பாகத்தை தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் கமல் எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தார் . ஆனால் சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தை தான் இப்பொழுது மகேஷ் நாராயணன் எடுக்க உள்ளார் . மேலும் இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.