நடிகர் விஜய் படத்தில் மைக் மோகன் நடிக்கிறாரா ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார் .

மேலும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யின் தந்தையாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் நடிகர் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மைக் மோகன் ஹாரா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் .

தளபதி 66 படத்தில் தான் விஜய்க்கு அண்ணனாக நடிப்பதாக வரும் தகவல் உண்மை இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் விஜய்க்கு அண்ணனாக நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது . இதற்கான விடையை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது .

Share.